டிஐஜி தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல- டிஜிபி
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து விட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் ரவி என்பவரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது, நேற்றிரவு துணை ஆணையர் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விஜயகுமார், கடந்த 2 நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், மன அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துவந்த நிலையில், இன்று காலை நடைபயிற்சிக்கு பின் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.