
தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டணப் பிரவேஷ விழா கோலாகலமாக நடைபெற்றது.
செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி
மயிலாடுதுறையில் 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத்தின் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தில் பட்டணப் பிரவேஷ விழா, கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆதீனக்கர்த்தரை சிவிகைப் பல்லக்கில் அமர வைத்து, பக்தர்கள் சுமந்து செல்வதற்கு திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 10) இரவு பட்டணப் பிரவேஷ விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாசார்ய சுவாமிகள், திரு ஆபரணங்கள் அணிந்து, தங்க கொரடு பாதரட்சையுடன் சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். சிவிகை பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்துச் சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன் நாதஸ்வர மேள தாளங்கள், செண்டை மேளங்கள் முழங்க ஆரவாரத்துடன் சிவனடியார்கள், பக்தர்கள், புடைச்சூழ ஆதீனம் வீதி உலா சென்றார். அப்போது, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடத்தப்பட்டன.
எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா?- அன்புமணி ராமதாஸ்
ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரண கும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பளித்து, தீபாராதனைக் காட்டி பொதுமக்கள் வழிபட்டனர். பக்தர்கள் ஆசி வழங்கி, திருநீறைப் பிரசாதமாக வழங்கினார்.
பட்டணப் பிரவேஷ விழாவில், சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.