தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை உள்பட 12 பேர் மீது பாய்ந்த வழக்கு!
தருமபுரி மாவட்டம், அரூரில் இன்று (பிப்.05) நடைபெறவுள்ள கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலய அர்ப்பணிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆலயத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இதற்காக, அரூரில் பெரும்பாலான இடங்களில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேனர்கள் மற்றும் கட்சிக் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட பேனரைக் கிழித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயகாந்த் சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பச்சைக் குத்திக் கொண்ட பிரேமலதா விஜயகாந்த்!
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், ஏராளமான காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அ.தி.மு.க.வினர் அரூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.