Homeசெய்திகள்தமிழ்நாடுதோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!

தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு சிறை!

-

- Advertisement -
kadalkanni

 

Photo: MS Dhoni

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, ரூபாய் 100 கோடி மான நஷ்ட ஈடுக்கோரி, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

டிச.16, 17 தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆதாரமின்றி, தோனியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமாருக்கு, 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தண்டனையை எதிர்த்து மேலமுறையீடு செய்ய ஏதுவாக, தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MUST READ