Homeசெய்திகள்தமிழ்நாடுஊர்வலம் எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்டாரா?- உயர்நீதிமன்றம்

ஊர்வலம் எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்டாரா?- உயர்நீதிமன்றம்

-

ஊர்வலம் எடுத்து செல்லும்படி விநாயகர் கேட்டாரா?- உயர்நீதிமன்றம்

விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Image

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ், “தமிழகத்தில் விநாயகரை வைத்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது. சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்காத நிலையில் கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? எதற்காக ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டாட வேண்டும்? சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்து செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இவை அனைத்தும் தனது சொந்த கருத்து. தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் ஏற்கப்பட மாட்டாது என்றார்.

Image

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ