Homeசெய்திகள்தமிழ்நாடு"சரித்திரத்தில் நடக்காத சம்பவம்"- அண்ணாமலை பேட்டி!

“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!

-

 

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.

“பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜன.7-ல் தேர்வு”- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் எந்த அளவிற்கு சட்டம்- ஒழுங்கு மோசமாகி உள்ளது என்பதை இந்த சம்பவம் தெளிவாக்கி உள்ளது. சரித்திரத்தில் நடக்காத சம்பவம் இது; தமிழகத்தில் இதுபோன்ற சம்பவத்தை யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கிய வைகுண்ட ஏகாதசி திருவிழா!

இந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வி; தமிழக அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை; தமிழகத்தில் இனி அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ