இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது!
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சுகாதார நிலைய கட்டடம் முழுமையாகச் சேதமடைந்திருப்பது புகைப்படத்திலும், அறிக்கையிலும் காண முடிவதாக உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
எனவே, போர்க்கால அடிப்படையில் கட்டடத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தைப் பாதுகாப்பான வேறு கட்டடத்துக்கு மாற்றி மருத்துவ சிகிச்சை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கனரக லாரி மோதிய விபத்தில் 5 மாடுகள் உயிரிழப்பு!
மேலும், சுகாதாரத்துறைச் செயலாளர் ஆய்வு செய்து, வரும் ஆகஸ்ட் 7- ஆம் தேதி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.