திரைப்பட இயக்குநர் அமீரின் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 09) காலை 07.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!
சென்னை தியாகராயர் நகர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (ஏப்ரல் 09) காலை 07.00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னை தியாகராயர் நகரில் உள்ள ராஜன் தெருவில் உள்ள திரைப்பட இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமீர் அலுவலகத்தில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கூடுதலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்.
அதேபோல், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி டெல்லி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் சாந்தோமில் உள்ள வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!
நீலாங்கரையில் உள்ள புஹாரி ஹோட்டலுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கொடுங்கையூரில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் திரைப்பட அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ரகு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.