திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் சரண்ராஜ் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில் மது போதையில் காரை ஓட்டிச் சென்று துணை நடிகர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையில் மதுரவாயல் தனலட்சுமி தெருவில் வசித்து வந்தவர் சரண்ராஜ் 26 வயதான இந்த இளைஞர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இடம் உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார் .
நேற்றைய தினம் இரவில் 11:30 மணி அளவில் தனது வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டிருக்கிறார் சரண்ராஜ். அப்போது கே.கே. நகர் பகுதியில் ஆற்காடு சாலை அருகே பைக் சென்ற போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பைக்கின் மீது மோதி இருக்கிறது. இந்த விபத்தில் பின்னால் உட்கார்ந்து இருந்த சரண்ராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்து கிடந்த சரண்ராஜ் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரயோக பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த விபத்து விபத்து குறித்து விசாரித்த போது மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் பழனியப்பன் என்பதும், அவர் சாலிகிராமம் எம்சி அவன்யூ பகுதியில் வசித்து வரும் துணை நடிகர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.