தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவு, உழவரைப் போற்றும் வகையில் அறுவடை திருவிழாவாக தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அறுவடைச் செய்த நெல்லைக் கொண்டு பொங்கல் வைத்து கதிரவனை வணங்கி உழவனைப் போற்றுகின்றனர்.
லால் சலாம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்.கொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்; அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென இந்த பொன்நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் பார்த்த அவரது ரசிகர்கள் பொங்கல் தின வாழ்த்துகளைத் தெரிவித்து உற்சாகமடைந்தனர்.