spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

-

- Advertisement -
kadalkanni

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா-வை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் உமா அவரகள் நிகழ்சியில் பேசுகையில்  பொங்கல் விழாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நாமக்கல் மாவட்டத்தில்தான் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவதை கண்டு நான் மகிழ்கிறேன் எனவும் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றாதீர்கள் என்று  உருக்கமாக பேசினாா்.பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த R .புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் JVM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் , குழந்தைகள் மற்றும் அவருடைய விவசாய பெற்றோர்களுடன் ஒன்றிணைந்து  சமத்துவ பொங்கல் விழாவை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ். உமா சிறப்பாக கொண்டாடினார். அப்போது அந்த விழாவில் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறுவது வருத்தமளிப்பதாகவும் , இளைஞர்கள் வேளாண்மை துறை சார்ந்த கல்விகளைப் பயின்று விவசாய புரட்சி செய்து விவசாயத்தை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

கிராமப்புறத்தில் உள்ள இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவரும் விவசாயிகள் என்பதால் மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயப் பெற்றோர்களுக்கு  மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கியும் இந்த விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் ,நடன நாட்டியத்தை முழுதும் அமர்ந்து கண்டு ரசித்த மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர் .

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், இங்கு உள்ள  இளைஞர்களும் குழந்தைகள் தான் பிற்காலங்களில் தமிழகத்தின் முதுகெலும்பு. கல்விக்கு நமது தமிழக முதல்வரும் ,துணை முதல்வரும் முக்கியத்துவம் அளித்து , அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் என்பது விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி, எனவே இங்கு பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் பிற்காலங்களில் வேளாண்மை துறையை சார்ந்த  கல்வியைப் பயின்று , வேளாண்மைத் துறையில் சிறந்து விளங்க வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, விவசாய துறையை பிற்காலங்களில் சிறப்பாக செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் .

மேலும் இன்று விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக மாறி வருவதைக் கண்டு தான் வருந்துவதாகவும் , ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள், தங்களின் நிலங்களை விற்று வருவது வருத்தம் அளிப்பதாகவும் , இதை கருத்தில் கொண்டே தமிழக அரசு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை மானியத்தில் வழங்கி விவசாயத்தை ஊக்குவித்து வருவதாக கூறினார்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பொங்கல் விழா –  குத்தாட்டம் போட்டு வரவேற்ற பெண்கள்

 

MUST READ