Homeசெய்திகள்தமிழ்நாடுகாலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

-

காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியானது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

இதேபோல் தமிழக பள்ளி காலாண்டு தேர்வை பொதுத்தேர்வாக நடத்துமாறு, அனைத்து மாவட்டங்களுக்கும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

MUST READ