Homeசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

-

 

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
File Photo

சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டும், மாற்றப்பட்டும் தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் சபாநாயகர் பதவிக்கு யூ டி காதர் வேட்புமனு தாக்கல்

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேருவும், தேனி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக ஐ.பெரியசாமியும் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியும், நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக ரகுபதியும் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக எ.வ.வேலு, தருமபுரி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராமநாதபுரம் பொறுப்பு அமைச்சராக தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி மாவட்டப் பொறுப்பு அமைச்சராக ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பெரம்பலூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வளர்ச்சிப் பணியைத் துரிதப்படுத்தி, இயற்கை சீற்ற நேரத்தில் அவசரகால பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ