Homeசெய்திகள்தமிழ்நாடுநெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!

-

 

நெருங்கும் தீபாவளி- புத்தாடைகள், அணிகலன்களை ஆர்வமுடன் வாங்கிய மக்கள்!
Video Crop Image

தித்திக்கும் தீபாவளிக்கு இன்னும் ஒருவாரமே மட்டுமே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!

முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கொண்டாட்டத்திற்கு மக்கள் தயாராகி வருகின்றன. சென்னையில் உள்ள வணிக நகரங்களான தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதாலும், மக்கள் ஏராளமானோர் கடைவீதிகளில் குவிந்தனர். தியாகராய நகரில் குவிந்த மக்கள் புத்தாடைகளையும், அணிகலங்களையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். தல தீபாவளிக் கொண்டாடும் தம்பதிக்கு கொடுக்க, குடும்பத்தினர் சீர்வரிசைப் பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..

அதேபோல், சாலையோரக் கடைகளிலும், மக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்ந்தனர். குற்றச் செயல்களைத் தடுக்க காவல்துறையினர், உயர் கோபுரங்களை அமைத்தும், சிசிடிவி கேமராக்களின் உதவியுடனும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ