Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று 4,095 சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர்...

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று 4,095 சிறப்பு பேருந்துகளில் 2.31 லட்சம் பேர் பயணம்

-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 95 சிறப்பு பேருந்துகளில் சுமார் 2.31 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் முதல் நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெருகி வரும் கூட்டம் 

இந்த நிலையில் நேற்று 2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,  ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக அரசு சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்தும் இயக்கப்பட்டன.

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - தொழிற்சங்க கூட்டமைப்பு

அதன்படி, நேற்று இரவு 12 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில், 2092 பேருந்துகளும், 1967 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் 2 லட்சத்து, 31 ஆயிரத்து, 363 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

MUST READ