Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!

-

 

தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!
Video Crop Image

தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

“தமிழகத்தில் 35 மாவட்டங்களில் மழை பெய்யும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மாநகராட்சியின் 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர். 7-வது வார்டு உறுப்பினர் ஆர்.மணி என்கின்ற சுண்ணாம்பு மணி ஆகிய நான்கு பேரும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி- 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

சமீபத்தில் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரைக் கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே போராட்டத்தில் ஈடுபடுவது, ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்து என தொடர்ச்சியாக, மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நான்கு கவுன்சிலர்கள் மீது தி.மு.க. தலைமை ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

MUST READ