Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!

-

- Advertisement -

 

நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!
File Photo

நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரியும், நீட் தேர்வை ரத்துச் செய்ய மறுக்கும், மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்தும் தி.மு.க.வின் இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை 09.00 மணிக்கு தமிழகம் முழுவதும் தொடங்கியது.

ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்து- 9 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. ஆதிக்கக்காரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்துள்ளனர்” என்றார்.

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு அதிரடி!

முன்னதாக, நீட் தேர்வால் உயிரிழந்த 24 மாணவர்கள் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

MUST READ