சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது,
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிக்கப்படுவது வழக்கம். அதன்படி நாளை சென்னை ராஜ்பவனில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்பதாக பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது. அதேவேளையில் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் தேநீர் விருந்தில் பங்கேற்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை முடிவை அறிவிப்பார் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.