Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

-

 

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 21 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தல் 2024- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் ஈஸ்வரசாமி, தென்காசி தொகுதியில் ராணி, நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, பெரம்பலூர் தொகுதியில் அருண் நேரு, கோவை தொகுதியில் கணபதி ராஜ்குமார், சேலம் தொகுதியில் டி.எம்.செல்வகணபதி, தஞ்சை தொகுதியில் முரசொலி, தருமபுரி தொகுதியில் மணி, திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை, ஆரணி தொகுதியில் தரணிவேந்தன், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, அரக்கோணம் ஜெகத்ரட்சகன், மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன், வட சென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன், வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த், ஈரோடு தொகுதியில் பிரகாஷ், கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன், காஞ்சிபுரம் தொகுதியில் செல்வம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்….வேட்பாளர்களின் கவனத்திற்கு!

தி.மு.க. வேட்பாளர்களில் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள், 9 வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க.வேட்பாளர்களில் 11 பேர் புதியவர்கள்; 3 பெண்கள், 2 முனைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ