திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவரும், மடத்துக்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்கள் ஐஸ்வர்யா – சூரியா ஆகியோருக்கு மரக்கன்று பசுமை கூடையினை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனிடையே, நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு விழாவிற்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது. அதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிருவாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.அர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், க.பொன்முடி, அமைச்சர்கள் எவ.வேலு, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் மணமக்களின் இருவீட்டரும் உடன் இருந்தனர்.