Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!

தி.மு.க. நிர்வாகி வீட்டிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள்!

-

 

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சென்னையில் சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஜோஸ்வா இமை போல் காக்க… அதிரடி காதல் கதையாக டிரைலர் ரிலீஸ்…

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இண்டர்நேஷ்னல் டிரேடு லிங்க்ஸ் என்ற நிறுவனத்தின் கிளைகள் டெல்லி, பரோடா, கொச்சின், திருச்சி ஆகிய இடங்களில் உள்ளன. சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு பேர் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், திருவிக நகரில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரும், தி.மு.க.வின் பூத் கமிட்டியின் பொறுப்பாளருமான டேனியல் செல்வகுமார் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிமாற்றம், வெளிநாடுகளில் முதலீடு உள்ளிட்டக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களிடம் ஆய்வு… பர்த் மார்க் இயக்குநர் சுவாரஸ்ய தகவல்….

டெல்லியில் இருந்து சென்னை வந்த அமலாக்கத்துறையின் செயல் இயக்குநர் ராகுல் நவீன் அதிகாரிகளுடன் நடத்தி ஆலோசனையில், நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

MUST READ