Homeசெய்திகள்தமிழ்நாடு"தி.மு.க. இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது"- அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

“தி.மு.க. இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது”- அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

-

 

"தி.மு.க. இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது"- அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி மாநகர தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளருமான சாமு நாசர், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் நினைவைக் குறித்து சிறப்புரையாற்றினர்.

புத்தாண்டே வருக! எங்களுக்கு புதிய புத்தியை தருக!! – என்.கே.மூர்த்தி

இந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர், “ராமருக்கு கோவில் கட்டி அனுமர் இருந்தது போல் இன்று மோடி ராமருக்கு கோவில் கட்டி இருந்து வருகிறார். இந்த நிகழ்வை அரசியலில் புகுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர், “63 சென்டி மீட்டர் மழை பெய்து நிவாரணத் தொகை கேட்ட தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். பாகுபாடு பார்க்கும் இந்த மத்திய அரசைக் கண்டித்து தொடர்ந்து அண்ணா கூறியது போல் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கருத்தை எவராலும் தவிர்க்க முடியாது” என்றார்.

ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்தி

அதைத் தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன், “தாய்மொழி காப்பதற்காகத் துப்பாக்கிக் குண்டுக்கு நெஞ்சை நிமிர்த்தி நின்றவர்கள், விஷம் குடித்து இறந்தவர்கள், இப்படிப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நிகழும் தினமாக இந்நாளில் அனைவரும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி அல்லாது வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளா விடினும் கவலை இல்லை. அப்படி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளா விடினில் அவன் தி.மு.க. காரனே இல்லை என்ற உணர்வோடு கலந்து கொண்ட உங்களை கண்டு நான் வியந்து போகிறேன்.

இப்படிப்பட்ட உணர்வு இருக்கும் வரையில் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், அசைத்துப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.

MUST READ