மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் வாழ்க்கையில், ஒன்றிய அரசு விளையாடி வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது வருந்தத்தக்கது. மாணவர்கள் பொறுமை காக்க வேண்டும். ஆளுநர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறிவருவது அவருடைய அறியாமையை காட்டுகிறது. நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் திமிராக பேசியுள்ளார். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தனி உலகத்தில் ஆளுநர் வாழ்ந்துவருகிறார். கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர் ஜெகதீஸ்வரன் இழப்பை கொச்சைப்படுத்தும் விதம் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும்.