Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக முப்பெரும் விழா தொடங்கியது - லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

திமுக முப்பெரும் விழா தொடங்கியது – லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

-

இன்று கோவையில் நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா சற்று முன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு , புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்ததை பாரட்டும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவாக கொண்டாட்டம் உட்பட முப்பெரும் விழா நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையொட்டி இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஜூன் 15 ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று மாலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் காரணத்தினால் அவிநாசி நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

MUST READ