தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் மற்றும் பேராசிரியர் விருது பெறுவோரின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் தி.மு.க. பவள விழா ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டு தோறும் வழங்கப்படும் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது பாப்பம்மாளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அண்ணா விருது அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கும், கலைஞர் விருது எஸ்.ஜெகத்ரட்சகனுக்கும் வழங்கப்படுகிறது. இதேபோல் பாவேந்தர் விருது கவிஞர் தமிழ்தாசனுக்கும், பேராசிரியர் விருது வி.பி. இராஜனுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.