Homeசெய்திகள்தமிழ்நாடு"சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்"- அண்ணாமலை பேட்டி!

“சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்”- அண்ணாமலை பேட்டி!

-

 

"சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்"- அண்ணாமலை பேட்டி!
Video Crop Image

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “30, 40 ஆண்டுகளாக பழையவர்கள் இருந்திருக்கிறார்கள்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும். எல்லாருடைய சித்தாந்தத்தையும் மக்கள் பார்த்து முடிவுச் செய்துக் கொள்ளட்டும்.

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!

சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு. சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியல் அளிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை. கௌரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங்காதது ஏன் என ஆளுநர் மாளிகை தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்!

தமிழகத்தில் மூன்று கட்சிகள் இருப்பதற்கு பதில் ஆறு கட்சிகள் என சாய்ஸ் இருந்தால் நல்லது தான். இலங்கை வாழ் தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி வருகிறது” என்றார்.

MUST READ