மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய திரெளபதி முர்மு, “கலாச்சாரம் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு வளமான கலாசாரம் மற்றும் நாகரீகத்தை கொண்டது. சென்னை பல்கலைக்கழகம் நாட்டிற்கு பல தலைவர்களை தந்துள்ளது. திருக்குறள் நம்மை பல நூற்றாண்டுகளாக வழிநடத்துகிறது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. மாணவர்கள் மிக உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது.
சென்னை பல்கலை. மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. கல்வியை மேம்படுத்துவதில் முன்னோடியாக சென்னை பல்கலை. திகழ்கிறது. பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம் சென்னை பல்கலை. இந்தியாவின் வெற்றிக்கு பல வகைகளில் சேவை புரிந்துள்ளது சென்னை பல்கலைக்கழகம். இது எண்ணற்ற வெற்றியாளர்களை உலகுக்கு கொடுத்துள்ளது” என்றார்.