Homeசெய்திகள்தமிழ்நாடுபாதுகாப்பான குடிநீர்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு!

பாதுகாப்பான குடிநீர்- தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!

இது குறித்த கடிதத்தில், அண்மையில் தண்ணீர் மாசுபாடு தொடர்பாக நடைபெற்ற ஒரு துரதிஷ்டவசமான சம்பவத்தைச் சுட்டிக்காட்டியதுடன், இத்தகைய சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.

சேதமடைந்த மற்றும் நீர் கசியும் குழாய்களை அடையாளம் கண்டு சரி செய்ய வேண்டும்; மேல்நிலைத் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும். தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து நீரின் தரத்தைப் பராமரித்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடிநீரில் கிருமிகள் கலந்துவிடாத வகையில் நீரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!

தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து அதிகமுறை சோதனை நடத்தி நீரின் தரம் உரிய மட்டத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ