Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

-

 

போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னையை அடுத்த ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பல்வேறு போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் செயல்படுத்தி வருகின்ற நிலையில், இன்று அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ASIA BOOK OF RECORDS இணைந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்று உலக சாதனை உருவாக்கும் “மாபெரும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் ஏற்பாட்டில், சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

தளபதி விஜயை தொடர்ந்து அரசியல் கட்சியை தொடங்கும் பிரபல தமிழ் நடிகர்!

இந்நிகழ்ச்சியில் 120 அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,600- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு “எனக்கு வேண்டாம் போதை, நமக்கும் வேண்டாம் போதை” என்பதை சங்கிலி தொடர்பில் ஒன்றிணைந்து செயல் வடிவம் கொடுத்து போதைக்கு எதிரான வாசகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்வு உலக சாதனை உருவாக்கும் நிகழ்ச்சியாக ‘ASIA BOOK OF RECORDS’-ல் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இறுதியாக தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் சங்கர் ஜிவால் முன்னிலையில், அனைவரும் போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்….. ஹீரோ யார் தெரியுமா?

மாபெரும் இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர், ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையாளர் மற்றும் ஆவடி ஆணையரக காவல் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் கூறுகையில், “இது போதைப் பொருளுக்கு எதிரான ஒரு போரை போல், போதைக்கு எதிரான ஒரு முயற்சியாக IEC என்று சொல்லக்கூடிய தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு அடிப்படையில் விழிப்புணர்வை தொடர்ந்து கல்லூரிகள் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் என பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி

தள்ளிப் போகும் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு …… அப்செட்டில் மோகன் ராஜா!

இந்த நிகழ்ச்சியில் இந்த பள்ளி மாணவர்களின் வீட்டில் உள்ள ஒவ்வொரு 4 பேர் என்ற அடிப்படையில் சுமார் 1.5 லட்சம் பேர் வரை இந்த போதைத் தடுப்பிற்கான விழிப்புணர்வு தகவல்கள் செல்ல வேண்டும். மேலும் இந்த சாதனையானது ‘ஆசியா புக் ரெக்கார்டில்’ இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

MUST READ