மே 01- ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். தமிழக உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்ப நிலை உயரக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 01- ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். மே 02- ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
அரசுப் பேருந்துகளை ஆய்வுச் செய்ய உத்தரவு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மே 03- ஆம் தேதி லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கக்கூடும். சென்னை நகரில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.