இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்ற போது, விபத்துக்குள்ளாகிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீலிங் செய்ய முயன்ற போது, நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
பழனி பஞ்சாமிர்தம் விலை உயர்ந்தது!
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.