Homeசெய்திகள்தமிழ்நாடுமிக்ஜம் புயல் எதிரொலி...டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு..... அண்ணா பல்கலைக்கழகம்!

மிக்ஜம் புயல் எதிரொலி…டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு….. அண்ணா பல்கலைக்கழகம்!

-

மிக்ஜம் புயல் எதிரொலி...டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு..... அண்ணா பல்கலைக்கழகம்!மிக்ஜம் புயல் மற்றும் அதிக கன மழை எச்சரிக்கையால் சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு தனியார் நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 4)பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயலானது இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. குடியிருப்புகள், கடைகள், விளையாட்டு மைதானங்கள், தாழ்வான பகுதியில் உள்ள தெருக்கள் என பல இடங்களிலும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள்,முதியவர்கள், உடல் நலமற்றோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் சார்பிலும் மீட்பு குழுக்கள் சார்பிலும் உணவுகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் புயல் கரையை கடந்த பின்பு ஏற்படும் இடிபாடுகளை விரைவாக சரி செய்யவும் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும் தற்போது பெய்து வரும் அதிக கன மழை நாளை வரை தொடர்ந்து பெய்யும் என்பதால் நாளையும் பள்ளி கல்லூரிகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் எதிரொலி...டிசம்பர் 9 வரை தேர்வுகள் ஒத்திவைப்பு..... அண்ணா பல்கலைக்கழகம்!இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படவிருந்த தொலைதூரக் கல்வி இயக்ககம் மற்றும் நேரடி கல்வி மாணவர்களுக்கான அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் வரும் டிசம்பர் 9 (சனிக்கிழமை) வரை ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயலின் பாதிப்பு எதிர்பாராத அளவுக்கு இருப்பதால் நிலைமை சரியாக சில தினங்கள் ஆகும் என்பதாலும் ,உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள கால அவகாசம் தேவைப்படும் என்பதாலும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், தங்கள் உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ