Homeசெய்திகள்தமிழ்நாடுமிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு...

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

-

- Advertisement -

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் விடாமல் பெய்து வரும் கனமழையினால் திருவள்ளூரில் 15 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட தொடங்கியுள்ளது. அதே சமயம் மரங்கள் சரிந்து விழவும், மின்சார கம்பிகள் அறுந்து விழும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் காலை 8:30 மணி வரை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே கன மழையின் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

MUST READ