ஜாம் புயலின் பிரதிபலிப்பாக 5 துறைமுகங்களில் 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணிக்கு மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசத் தொடங்கி புயலாக வலுப்பெற்ற நிலையில், அதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே வானிலை மையம் எச்சரித்தபடி மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
அதே வேளையில் நேற்று சென்னை உட்பட ஐந்து துறைமுகங்களில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது துறைமுகங்களின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் நேரத்தில் மிக மோசமான வானிலை நிலவும் என்பதை தெரிவிக்கும் வகையில் 5ஆம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய நான்கு துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டதன் படி, தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.