Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

-

- Advertisement -

வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு.

விசிக போராட்டம் அறிவிப்பால் வேங்கைவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு ஆண்டுகளைக் கடந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த நிலையில் இது நேற்று தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதில் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த காவலர் முரளி ராஜா, முத்துகிருஷ்ணன் சுதர்சன் ஆகிய மூன்று பேர் தான் இந்த செயலில் ஈடுபட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே வேங்கை வயல் மற்றும் இறையூர் பகுதிகளுக்கு வரும் வழிகளில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நபர்களே எப்படி இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பார்கள் அதனால் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தை கட்சியினர் இன்று வேங்கை வயலில் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வேங்கைவயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – மருத்துவமனையின் மனிதநேயற்ற செயல் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

MUST READ