Homeசெய்திகள்தமிழ்நாடுபோலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

-

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் மூர்த்தி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8 ஆயிரம் கோடி கூடுதலாக பதிவுத்துறை கொடுத்துள்ள நிலையில், அரசு 26 ஆயிரம் கோடி நிர்ணயித்துள்ளது என்றும் போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ