ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹால் ‘பாரதியார் மண்டபம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆடிக் கிருத்திகை: திருத்தணிக்கு கூடுதலாக 300 அரசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் இன்று (ஆகஸ்ட் 06) இரவு 07.30 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ராஜ்பவனில் ‘பாரதியார் மண்டபம்’ என்ற புதிய பெயர் பலகையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார். முன்னதாக, ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியார்’ அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்தையும் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் இரவு விருந்தளித்தார்.