Homeசெய்திகள்தமிழ்நாடுஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப். 5 வரை பெற்றுக் கொள்ளலாம்

-

- Advertisement -

குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வரும் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கிட்டை வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு - கூட்டுறவுத்துறை

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது.

 

MUST READ