மளிகைப் பொருட்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது துவரம் பருப்பு. நாட்டின் பிற பகுதிகளைப் போல தமிழகத்திலும் துவரம் பருப்பின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. துவரம் பருப்பு தேவையில் 2% முதல் 4% வரையே தமிழகத்தில் உற்பத்திச் செய்யப்படுகிறது. மீதமுள்ள 96% கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
வரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!
முந்தை ஐந்து ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, கடந்த ஓராண்டில் மட்டும் தான் துவரம் பருப்புவின் விலை அதிகரித்துள்ளது. பொதுவாக, மழைக் காலங்களில் பயிர் செய்யப்பட்டு, பனிக் காலத்தில் அறுவடைச் செய்யப்படும் பயிரான துவரம் பருப்பு, கடந்த ஆண்டில் தட்வெப்பநிலை மாற்றத்தால் போதிய விளைச்சல் இல்லாமல் போனது.
மேலும், 2019- 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஏற்பட்ட விலை வீழ்ச்சியால், பெரும்பாலான விவசாயிகள் துவரம் பருப்பு சாகுபடியைத் தவிர்த்து, மாற்றுப் பயிர் சாகுபடியில் ஈடுபடுவதும் விலையேற்றத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ துவரம் பருப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் விலை மேலும் அதிகரித்திருப்பது சாமானிய மக்களைக் கவலையடைய வைத்துள்ளது.
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
ஆண்டுதோறும் துவரம் பருப்பு அறுவடை டிசம்பர் மாதத்தில் தான் நடைபெறும் என்பதால், அந்த காலகட்டம் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டில் குறித்த நேரத்தில் பருவமழைத் தொடங்கியிருப்பதால், போதிய விளைச்சல் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்னர்.