Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி கட்டாயம்

-

உயர் கல்விக்கு விண்ணப்பித்தல் கல்லூரியில் சேர்க்கை பெறுதல் ஆகியவற்றிற்கு மின்னஞ்சல் கட்டாயம் என்பதால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரியை(E-Mail ID) உருவாக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளார்.

students

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் மாநிலத் திட்ட இயக்குனர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், 2022-23ம் கல்வியாண்டில் நான் முதல்வன் திட்டம் சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக கல்லூரிகளில் சேரும் அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணபிக்கப்படுவதால், அவ்வாறு விண்ணப்பிக்கும் நிலையில் பெரும்பாலான கல்லூரிகள், கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருத்தல் என்பது கட்டாயமான ஒன்றென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இவ்வாண்டு 12ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஓர் மின்னஞ்சல் முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள் உதவியுடன், அவர்களாகவே உருவாக்கிட தக்க வழிகாட்டிட தலைமையாசிரியர்களும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சலை உருவாக்கிய பின் மாணவர்கள் மின்னஞ்சலுக்குள் எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல் எவ்வாறு அனுப்புவது பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது மின்னஞ்சலில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து அனைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்களும் கற்பித்தல் வேண்டும்.

மின்னஞ்சலின் கடவுச்சொல்லை (PASSWORD) மாணவர்கள் நினைவில் வைத்திருத்தல் வேண்டும், மற்றவர்களுக்கு பகிரக் கூடாது எனவும், இதன் மூலம் மற்றவர்கள் தங்கள் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துதலை தவிர்க்கலாம் என்கின்ற விவரங்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு நான் புதிய மின்னஞ்சல் முகவரியினை பெற்றேன் என்றும், உயர்கல்வியில் தங்களின் இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினையும் மாணவர்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்ட வேண்டுமென உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஜனவரி 09-12ம் தேதிக்குள் Hitech லேப் கணினிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ