ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சென்னை சாந்தோம், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தியை ஏந்திய படி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!
பேராலயத்தில் இயேசு பிரான் உயிர்த்தெழுவும் நிகழ்வு தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வின் போது, கண்கவர் வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன.