லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 2 நாள் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவரிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய போது, கையும், களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துரத்திப் பிடித்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையும் நடத்தியிருந்தனர்.
பின்னர், நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் திண்டுக்கல் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த நிலையில், நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்பு அங்கித் திவாரியை காவல்துறை ஆஜர்ப்படுத்தியது.
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
அப்போது, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையேற்ற நீதிபதி மோகனா, அங்கித் திவாரியை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியதுடன், விசாரணை முடிந்து அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.