Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அதிரடி!

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அதிரடி!

-

- Advertisement -

 

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அதிரடி!

மதுரையில் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ளது.

மார்கழி மாதத்தில் விளையும் அதலைக்காயின் அற்புத குணங்கள் பற்றி அறிவோம்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் மற்றும் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். ஆனால், காவல்துறையினருடன் வந்த ஊழல் தடுப்பு அதிகாரிகளை அமலாக்கத்துறையினர் உள்ளே விட மறுத்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

காது சம்பந்தமான பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்!

லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. அளித்த புகாரில் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MUST READ