Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு!

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை (நவ.28) தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் பற்றி அறிவோம்!

சட்டவிரோத மணல் குவாரி வழக்குகளில் மாவட்ட ஆட்சியர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து, தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று (நவ.27) விசாரணைக்கு வந்த போது, “சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளவைத் தவிர அனைத்து குவாரி விவரங்களை அமலாக்கத்துறை எப்படி கோரலாம்? விசாரணைக்கு உதவி கோருவதற்கும், சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது” என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், “ரூபாய் 4,500 கோடிக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையை டி.ஜி.பி. வழங்கவில்லை” என்று வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரிப்பது மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்டது. கனிமவளக் குற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது, மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு உதவும்படி கோரலாம். குவாரி உரிமையாளர்களின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

சளி, இருமலுக்கு மருந்தாகும் தூதுவளை துவையல்!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை (நவ.28) வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு நாளை (நவ.28) தீர்ப்பு வழங்குகிறது.

MUST READ