Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக- எடப்பாடி பழனிசாமி

குரூப் 4- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக- எடப்பாடி பழனிசாமி

-

குரூப் 4- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புக- எடப்பாடி பழனிசாமி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4க்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

tnpsc

டிஎன்பிஎஸ்சி தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் , ஆகவே விரைந்து தொகுதி -4க்கான காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ