அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை எழும்பூர் பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அஜித் பிறந்தநாளில் வெளியாகும் ‘விடாமுயற்சி’ அப்டேட்…. வெளியான புதிய தகவல்!
அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் பேசியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% நான் பயன்படுத்தவில்லை என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பரப்புரையில் பேசியுள்ளார். தொகுதி நிதியை செலவிட்டுள்ள நிலையில், அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவதூறு பேச்சுக்காக நோட்டீஸ் அனுப்பிய நிலையில் பதில் வராததால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நாளை சினிமா காட்சிகள் ரத்து!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அடுத்த மாதம் 14- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.