Homeசெய்திகள்தமிழ்நாடுஉச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும், கடந்த 2018- ஆம் ஆண்டு தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

ஆனால், அந்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதித்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கை மீண்டும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சி மாற்றம் காரணமாக, பழைய புகாரை மீண்டும் விசாரிக்க தேவையில்லை எனக் கூறி, ஆர்.எஸ்.பாரதியின் மனுவை, கடந்த ஜூலை 18- ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டால், தங்கள் தரப்புக் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

MUST READ