நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எஸ்க் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் கழக வெற்றி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள். மாண்புமிகு அம்மா அவர்கள் கூறிய “மக்களால் நாம்- மக்களுக்காகவே நாம்” என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் நிறுத்தி களம் காண்போம்.
#தமிழர்_உரிமை_மீட்போம் #தமிழ்நாடு_காப்போம், நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்! வாக்களிப்பீர் #இரட்டைஇலை! வாக்களிப்பீர் #முரசு என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.