Homeசெய்திகள்தமிழ்நாடுமூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.....சேலத்தில் ஜவுளி பூங்கா....தஞ்சையில் சிப்காட் தொழிற்பூங்கா!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்…..சேலத்தில் ஜவுளி பூங்கா….தஞ்சையில் சிப்காட் தொழிற்பூங்கா!

-

- Advertisement -

 

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.....சேலத்தில் ஜவுளி பூங்கா....தஞ்சையில் சிப்காட் தொழிற்பூங்கா!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

அ.தி.மு.க.வில் பிப்.21 முதல் விருப்ப மனு விநியோகம்!

அப்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, “விருதுநகர், சேலத்தில் ரூபாய் 2,483 கோடியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; இரண்டு ஜவுளி பூங்காக்கள் மூலம் 2.08 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடங்கப்படும். மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டத்திற்கு ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களின் பள்ளி, கல்லூரிக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப் பகுதிகளில் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். 10,000 சுய உதவிக்குழுக்கள் புதிதாக உருவாக்கப்படும். 500- க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கும் நிறுவனத்திற்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.

புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்; சிப்காட் தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் பெண்களின் நலன்களை கருதி குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி மற்றும் உந்துவிசை பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!

தஞ்சையில் ரூபாய் 120 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் ரயில்வே, வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,100 கோடியில் அமைக்கப்படும்” என அறிவித்துள்ளார்.

MUST READ