Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்குச் சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வாக்குச் சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

வாக்குச் சேகரிப்பின் போது வாலிபால் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது – டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்க்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை முடித்துக் கொண்டு தஞ்சைக்கு சென்றார். அங்கு தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர், அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அங்கிருந்த இளம் விளையாட்டு வீரர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைத்தட்டி வரவேற்பு அளித்தனர். அங்கிருந்த மக்களிடம் வாக்குச் சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினார்.

விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களையும் சந்தித்த முதலமைச்சர், அவர்களிடம் இருந்து வாலிபாலை வாங்கி விளையாடினார். அங்கிருந்த சிறார்கள், பொதுமக்கள் முதலமைச்சருடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுச் செய்த சென்னை அணி!

அதைத் தொடர்ந்து, காய்கறி சந்தைக்கும் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். வாக்குச் சேகரிப்பின் போது, முதலமைச்சர், தேநீர் கடையில் தேநீர் அருந்தினார்.

MUST READ